உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

வில்லியனுார் : அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் 30வது ஆண்டு விழா நடந்தது. சற்குரு ஓட்டல் நிர்வாக இயக்குனர் அமர்நாத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் வரவேற்றார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும்பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.திருக்குறள் மன்ற தலைவர் சுந்தரலட்சுமணன், சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி