உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமகிருஷ்ண மடம் தலைவர் முதல்வருடன் சந்திப்பு

ராமகிருஷ்ண மடம் தலைவர் முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி : சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சத்திய ஞானானந்தா மகராஜ் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.சந்திப்பின்போது, புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சிக்கும், புதுச்சேரியில், ஏழை மாண வர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நித்திஷ் நந்தா, திருபுவனை ராமகிருஷ்ண சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட் டளை செயலாளர் சீனிவாசன் மற்றும் புதுச்சேரி ராமகிருஷ்ண சேவா சங்க செயலாளர் கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை