உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி சென்டம்

ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி சென்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் ரித்திக்கா, ஸ்ரீநிதி ஆகிய இருவரும் 457 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் நகுல் கிேஷார் 442 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி கனிஷ்கா 436 மதிப்பெண் பெற்று மூன்டாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் துணை மையமாக அமைந்துள்ள புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷ் நந்தா மகராஜ் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினார். பள்ளி தாளாளர் கணேசன், இயக்குநர் கிருஷ்ணராஜூ, சேவா சங்க பொருளாளர் முத்துராமன், செயலாளர் சுரீந்தர் சாதனை புரிந்த மாணவர்கள், துணையாக இருந்த பள்ளி துணை முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை