உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீண்டும் புத்தக வடிவில் ரேஷன் கார்டு நுாலகங்கள் டிஜிட்டல் மயம்

மீண்டும் புத்தக வடிவில் ரேஷன் கார்டு நுாலகங்கள் டிஜிட்டல் மயம்

புதுச்சேரி: குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்ட தவறியவர்களுக்கு பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும் என அமைச்சர் திருமுருகன் தெரிவித்தார்.சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் பதில் அளித்து பேசியதாவது;கலை பண்பாட்டுத் துறையில் அனைத்து நுாலகங்களும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக அரசு கட்டங்களில் இயங்கும் நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். நுாலக கட்டங்கள் புதுப்பிக்கப்படும்.25 நுாலக தகவல் உதவியாளர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்ய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.2025-26ம் ஆண்டிற்கான கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும். இதில், புதிதாக புகைப்பட கலை, பேச்சுக்கலை சேர்க்கப்பட உள்ளது. காரைக்கால் அம்மையார் பெயரில் இயல், இசை, நாடக பிரிவில் விருது வழங்கப்படும்.கலைமாமணி, தமிழ்மாமணி விருதாளர்களுக்கு விருது தொகைய உயர்த்தி வழங்கவும், மாதாந்திர உதவி தொகை உயர்த்தி வழங்கவும், ஈமச்சடங்கு நிதி அளிக்க எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதிநிலைக்கு ஏற்ப கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.குடிசை மாற்று வாரியம் மூலம் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகட்ட தவறியவர்கள் மற்றும் வீடுகட்டி முடிக்கமுடியாத பயனாளிகளிடம் இருந்து அசல் தொகையை மட்டும் பெற்று கொண்டு, பாத்திரங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 8,638 குடும்பங்கள் பயன் பெறுவார்.வீடு கட்டும் திட்டத்தில் 5ம் கட்டத்தில் வழங்கப்பட்ட 14,687 பயனாளிகளில் 118 பேர் தகுதியற்ற முறையில் தேர்வு செய்ததாக சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் 2வது தவணை பெறாத 3,400 பயனாளிகள், 3வது தவணை பெறாத 5,499 பயனாளிகளின் அசல் சொத்து ஆவணங்களை விடுவிக்க முடியாத நிலை உள்ளது.வழக்கில் தொடர்பு இல்லாதவர்களின் தொகையையும் அசல் சொத்து பத்திரங்கள், இதற்கென அமைக்கப்பட்ட குழு பரிந்துரைபேரில் விடுவிக்கப்பட்டு வருகிறது. விடுவிக்கும் பணியை விரைவுப்படுத்தப்படும். குடிசை மாற்று வாரிய ஊழியர்களுக்கு மாதந்திர ஊதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிவப்பு அட்டை தவிர மற்ற ரேஷன் கார்டுகள் தொடர்பான அனைத்து சேவைகளும் பொது சேவை மையம் மூலம் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் மெஷின் மற்றும் பயோமெட்ரிக் டிவைஸ் உபகரணம் பொறுத்தப்படும். ரேஷன் கடைகளில் பொருட்கள் கையாளும் கட்டணம் கிலோவுக்கு 90 பைசாவில் இருந்து ரூ. 1.80 பைசாவாக உயர்த்தி ஏப்ரல் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழியர்கள் சம்பளம், ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள் சரிசெய்யப்படும். ரேஷன் அரிசி அந்தந்த மாதத்தில் வழங்கி முடிக்க விதிமுறைகள் உருவாக்கி உள்ளோம். வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ஒரு சில இடங்களை மட்டும் தேர்வு செய்து இ-ஆக் ஷன் மூலம் விற்பனை செய்யும் பட்சத்தில் ஒரு பெரும் தொகை முதலீடாக உருவாக்கி, வீட்டு வசதி வாரியத்தை சிறப்பாக செயல்பாட்டிற்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி