உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கார்டுகளின் உறுப்பினர்கள் இ-கே.ஓய்.சி., செய்ய அறிவுறுத்தல்

ரேஷன் கார்டுகளின் உறுப்பினர்கள் இ-கே.ஓய்.சி., செய்ய அறிவுறுத்தல்

புதுச்சேரி : அனைத்து ரேஷன் கார்டுகளின் உறுப்பினர்கள் இ-கே.ஓய்.சி., செய்ய குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து துறை இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: உச்ச நீதிமன்றம் மற்றும் உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பயனாளிகள் உடனடியாக இ-கே.ஓய்.சி.,யை பூர்த்தி செய்ய வேண்டும். இதனால், அனைத்து அரசு சலுகைகளும் சரியான பயனாளிகளை சென்றடைகின்றனவா என்பதை கண்காணிக்க முடிகிறது. எனவே, அனைத்து ரேஷன் கார்டுகளின் உறுப்பினர்கள், தங்கள் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையுடன் சென்று எந்தவித கட்டணமும் இன்றி இ-கே.ஓய்.சி., செய்ய வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ