வாசகர்கள் கருத்துகள் ( 1 )
5000 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தது மிக வேடிக்கையாக உள்ளது. பெரிய கடை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே பல வாடகை நிலையங்கள் செயல்படுகின்றன இது போல சரக்கு தெரியாதா.
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் வாடகைக்கு இருசக்கர வாகனங்களை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் ஏரளமான இருசக்கர வாகன வாடகை கடைகள் உள்ளன. இந்நிலையில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடை உரிமையாளர்கள் வாகனங்களை சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.இதையடுத்து, புதுச்சேரி போக்குவரத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் புஸ்சி வீதியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறுகையில், 'புதுச்சேரியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறினால் அபராதமும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்' என தெரிவித்தனர்.
5000 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தது மிக வேடிக்கையாக உள்ளது. பெரிய கடை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே பல வாடகை நிலையங்கள் செயல்படுகின்றன இது போல சரக்கு தெரியாதா.