உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிள்ளைத்தோட்டம் அரசு பள்ளிக்கு ஜானகிராமன் பெயர் சூட்ட கோரிக்கை

பிள்ளைத்தோட்டம் அரசு பள்ளிக்கு ஜானகிராமன் பெயர் சூட்ட கோரிக்கை

புதுச்சேரி: பிள்ளைத்தோட்டம் அரசு துவக்கப் பள்ளிக்கு முன்னாள் முதல்வர்ஜானகிராமன் பெயரை சூட்ட வேண்டும் என தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.பிள்ளைத்தோட்டம் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் அந்த பகுதியில் நடந்தது. தி.மு.க., அவைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வேலவன் முன்னிலை வகித்தனர்.தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது.பிள்ளைத்தோட்டம் அரசு துவக்கப் பள்ளிக்கு முன்னாள் முதல்வர்ஜானகிராமன் பெயரை சூட்ட வேண்டும். பிள்ளைத்தோட்டம்ஆனந்த முத்து விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண் வாடகைக்கு 70 ஆண்டுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு என்.ஓ.சி., வழங்கி வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். பிள்ளைத்தோட்டம் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஞானராஜன், கிளை துணைச்செயலாளர் சாந்தி, பொருளாளர் விக்ரமன், தொகுதி மாணவரணி துணை அமைப்பாளர் விஸ்வா, தொகுதி துணை அமைப்பாளர் வெங்கடேசன், மொழிப்போர் தியாகி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தி.மு.க.,பொறுப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை