உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விதிமுறைகளை பின்பற்றி இ-பஸ்களை இயக்க கோரிக்கை

விதிமுறைகளை பின்பற்றி இ-பஸ்களை இயக்க கோரிக்கை

புதுச்சேரி: வழித்தடம், நேரம் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி மின்சார பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துமோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் முருகசாமி, பொருளாளர் சரவணன் மற்றும் அனைத்து கூட்டுக்குழுவிடுத்துள்ள அறிக்கை: அரசு சார்பில் புதுச்சேரியில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக வாங்கியுள்ள 25 பஸ்களை, இயக்க தனியார் நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பஸ்களுக்கு வழித்தடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விதிமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் எந்த வழித்தடத்திலும் இயக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மோட்டார் தொழிலை நம்பி உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், பி.ஆர்.டி.சி., நிர்வாகமும் நலிவடையும்.எனவே, மின்சார பஸ்களை அரசே ஏற்று, வழித்தடம், நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி