மேலும் செய்திகள்
வழிகாட்டி பலகை சேதம் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
12-Apr-2026
புதுச்சேரி: வில்லியனுார் புறவழிச்சாலையில் பெயர் பலகை வைக்க லால் பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்றம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, லால் பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்ற நிறுவனம் கலியமுருகன் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை: கடலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் புறவழிச் சாலையில் ஆங்காங்கே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. வில்லியனுார் புறவழிச் சாலை மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கோர்க்காடு, உறுவையாறு, விழுப்புரம் என வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வில்லியனுார் என்ற பெயர் பலகை அவசியம் வைக்க வேண்டும். வெளியூரில் இருந்து வருபவர்கள் எளிதில் அடையாளம் தெரிந்து கொண்டு வில்லியனுார் பகுதிக்கு செல்வதற்கு மிக எளிதாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக அமைக்க நடடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
12-Apr-2026