உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண நிலையம் அமைக்க கோரிக்கை

திருமண நிலையம் அமைக்க கோரிக்கை

நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் பகுதியில் அரசு திருமண நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெட்டப்பாக்கம் தொகுதியில், கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், சின்ன கரையாம்புத்துார், மணமேடு, கடுவனுார் உட்பட 15 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெற, அரசு சார்பில் குறைந்த வாடகையில் சுப நிகழ்சிகள் நடத்தும் வகையில் அரசு திருமணம் நிலையம் கட்டித்தர வேண்டும் என, நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.எனவே, கரையாம்புத்துார் பகுதியில் அரசு திருமண மண்டபம் கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !