மேலும் செய்திகள்
வேளாண் கருத்தரங்கம்
12-Oct-2024
புதுச்சேரி : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, காரைக்கால் பஜன்கோ கல்லுாரி, ஹைதராபத் தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நெல் உற்பத்தியில் தொழில்நுட்பம் கருத்தரங்கம் நடந்தது.உருவையாறு சாய்பாபா கோவில் வளாகத்தில் நடந்த கருத்தரங்கை வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் துவக்கிவைத்து, விவசாயிகள் நெல் மகசூல் அதிகம் கிடைக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.கூடுதல் இயக்குனர் ஜாகிர்உசேன், நெல் சாகுபடியில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள், பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கருத்தரங்கில் புதுச்சேரியில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
12-Oct-2024