மேலும் செய்திகள்
பாகூரில் 8.7.செ.மீ., மழை பதிவு
2 minutes ago
மதகடிப்பட்டில் கார்த்திகை தீப விழா
2 minutes ago
த.வெ.க., ஆனந்த் மீண்டும் முதல்வருடன் சந்திப்பு
3 minutes ago
புதுச்சேரி: தோல் உரிந்து கந்தலாகி பரிதாபமாககிடக்கும் உப்பளம் ஹாக்கி மைதானம் 9 கோடி ரூபாயில் மீண்டும் புத்துயிர் பெற உள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் விளையாட்டு துறை சார்பில், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் பின்புறம் செயற்கை புல் ஹாக்கி மைதானம் கடந்த 2004ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட இந்த செயற்கை புல் ஹாக்கி மைதானம், அந்த நாட்களில் பச்சை பசேல் என ஜொலித்தது. தினமும் நுாற்றுக்கணக்கான காலணிகளின் சத்தம்… ஓடும் வீரர்களின் மூச்சுக்காற்று, கோல் கீப்பரை நோக்கி பாயும் பந்து … எல்லாம் சேர்ந்து மைதானத்தின் உயிர்ப்பினை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு காலையும், இன்றோ புதிய சாதனை பிறக்குமா என்ற எதிர்பார்ப்புடன் எழுந்த மைதானம், புதுச்சேரி மைதானத்தின் பெருமைச் சின்னமாக இருந்தது.ஆனால் அதன் ஆயுட்காலமாகக் கருதப்பட்ட ஏழு ஆண்டுகள் கடந்து, பிறகு மைதானம் தாங்க முடியாத துயரங்களுக்கு ஆளானது. ஒரு காலத்தில் பச்சை நிறத்தில் புன்னகைத்த புல்தரை, இப்போது கந்தலாகி விட்டது. குறிப்பாக கோல் கம்பம் அருகில் குண்டும் குழியுமாகபரிதாபமாக காட்சியளித்தது. இதை பொருட்படுத்தாமல் ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் அங்குபயிற்சியை தொடரும் நிலையில், தவறி கீழே விழுந்து காயமடைந்தனர். வேறுவழியின்றி மண் தரை மைதானத்தில் புழுதி பறக்க பயிற்சி மேற்கொண்ட அவலமும் நடந்தது. அதோடு புதுச்சேரி வீரர்கள் கனவுகளைத் தாங்கி, பல முறை 3,000 முதல் 5,000 ரூபாய் வரை செலவழித்து, சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று திரும்பிய அவலமும், இந்த மைதானத்தின் துயரக் கதையில் எழுதப்படும் கறுப்பு பக்கத்தில்ஒன்றாகவே இருந்தது. இனி இருள் மாறுகிறது... 9 கோடி ரூபாய் செலவில் உப்பளம் ஹாக்கி மைதானம் மீண்டும் எழுகிறது. செயற்கை புல் மட்டுமன்றி, சர்வதேச தரத்தில் 'ஆஸ்ட்ரோ டர்ப்' மைதானமாக மாற்றி, புதுச்சேரியின் விளையாட்டு எதிர்காலத்தில் புதிய ஒளி வீசப்படுகிறது. அமைக்கப்படும் பச்சை புல்வெளி மைதானத்தை பாதுகாக்க சுற்றிலும் வலுவான இரும்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து விளையாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், 'மீண்டும் சர்வதேச தரத்தில் 'ஆஸ்ட்ரோ டாப்' ஹாக்கி மைதானம் அமைய உள்ளது. பொதுப்பணித் துறை வாயிலாக இதற்கான டெண்டர் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.மைதானத்தை முற்றிலும் பாதுகாக்கும் வகையில் சுற்றிலும் இரும்பு வேலிகளும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் புதுச்சேரிஹாக்கி வீரர்களுக்கு, சர்வதேச அளவில் சாதிப்பதற்கான அருமையான மைதானம் கிடைக்க உள்ளது. இந்த மைதானத்தை நல்ல முறையில் வீரர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றனர். ஹாக்கி மைதானத்தில் மறு உயிர்ப்பு அடுத்ததலைமுறையினருக்கு கனவுகளையும் திறக்க உள்ளது.புதிய மைதானத்தைஹாக்கி வீரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago