மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
20-Jan-2026
புதுச்சேரி: கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்திரா சதுக்கத்தில் துவங்கிய ஊர்வலத்தை கலாம் ரோலர் ஸ்கேட்டி கிளப் தலைவர் வெங்கடேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் நெல்லித்தோப்பு, புதிய பஸ் நிலையம், புஸ்சி வீதி வழியாக கடற்கரை சாலை காந்தி சிலை அருகே முடிவடைந்தது. கிளப் செயலாளர் காமேஷ்வரன் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். ஏற்பாடுகளை கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர். சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்களின், பொற்றோர்கள் ஏற்றுக் கொண்டனர்.
20-Jan-2026