மேலும் செய்திகள்
வாலிபருக்கு ' குண்டாஸ் '
23-Jan-2026
புதுச்சேரி: குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார். உருவையாறு பகுதியை சேர்ந்தவர் முருகன், 23. ரவுடியான இவர் மீது கொலை, திருட்டு, அடிதடி, கஞ்சா கடத்தல், போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் கஞ்சா வழக்கு தொடர்பாக முருகனை மங்கலம் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வே று குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவருடைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு ச ட்டத்தின் கீழ் கைது செய்ய, புதுச்சேரி மேற்கு போலீஸ் எஸ்.பி., சுப்ரமணி யன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். இதையடுத்து முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
23-Jan-2026