உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்டில்  கோவில்களுக்கு ரூ. 1 கோடி

பட்ஜெட்டில்  கோவில்களுக்கு ரூ. 1 கோடி

 : பட்ஜெட்டில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு குறித்து முதல்வர் அறிவிப்பு; இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை வெளிப்படையாகவும், திறன்மிக்கதாகவும் மேற்கொள்ளும் வகையில், மொபைல் செயலி மற்றும் புவியியல் தகவல் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் 243 கோவில்களின் அடிப்படை விவரங்கள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது. கோவில்களின் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு  பழுதுபார்ப்பு பணிகளுக்காக 11.50 கோடி ரூபாயில் மானிய உதவி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், கோவில்களில் ஒரு கால பூஜை நடத்துவதற்கு 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ