உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தரமற்ற மின் விளக்குகளை அனுப்பி ரூ.15 லட்சம் மோசடி

தரமற்ற மின் விளக்குகளை அனுப்பி ரூ.15 லட்சம் மோசடி

புதுச்சேரி : தரமற்ற மின் விளக்குகள் அனுப்பி 15 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மண்ணாடிப்பட்டைச் சேர்ந்த நபர், நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்பணிக்காக, மின் விளக்குகள் தேவைப்பட்டதால், ஆன்லைன் மூலம் ஓசூரை சேர்ந்த நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி, மின் விளக்குகளை ஆர்டர் செய்தார். ஆனால், அந்த நிறுவனம் அவருக்கு தரமற்ற மின் விளக்குகளை அனுப்பி மோசடி செய்துள்ளது.இதேபோல், உருளையன்பேட்டை சேர்ந்த நபர், வாட்ஸ் ஆப்பில் வந்த விளம்பரத்தை நம்பி 18 ஆயிரத்து 541 ரூபாய்க்கு பிளாஸ்டிக் ரோல் பொருள் ஆர்டர் செய்துள்ளார். இதுவரையில் ஆர்டர் செய்த பொருட்கள் அவருக்கு வரவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ