உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பேரிடம் ரூ.4 லட்சம் அபேஸ்

2 பேரிடம் ரூ.4 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: குயவர்பாளையத்தை சேர்ந்தவர், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, மணமகள் தேடினார். அவரை தொடர்பு கொண்ட நேஹா என்ற பெண், அறிவுறுத்தலின் பேரில், ஆன்லைன் வர்த்தகத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். டி.என்.பாளையத்தை சே ர்ந்தவர், ஆன்லைனில் விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர், விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு உள்ளது, அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பிய, அவர் 33 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை