மணல் கொள்ளை : போலீசார் விசாரணை
பாகூர் : கரையாம்புத்துார் அருகே பைக் மூலமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பாகூர் அடுத்த மணமேடு தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக கரையாம்புத்துார் போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் கடந்த 24ம் தேதி அதிகாலை ரோந்து சென்றனர். மணமேடு வழியாக மூட்டைகளுடன் பைக்கில் சென்ற வாலிபரை தடுத்து நிறுத்த முயன்றனர். அவர், தப்பிச் சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பைக்கை போட்டு விட்டு, தப்பிச் சென்றார். போலீசார் சென்று பார்த்த போது, மூட்டைகளில் மணல் இருந்தது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் 24; என்பவர், தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை திருடி மூட்டைகளாக கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.