மணல் திருடியவர் கைது
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் மலட்டாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது வடுக்குப்பம் மலட்டாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு கல்மண்டபம் வந்தவர் போலீசாரை பார்த்தவுடன் வண்டியை விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம், 26, என்பதும், இவர், வடுக்குப்பம் மலட்டாற்றில் மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, சிவலிங்கம் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.