உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்

 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்

புதுச்சேரி: அதிக வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில், வரும், 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: இந்த கல்வியாண்டிற்கான ஏப்ரல் 1ம் தேதி, புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிக வெயில் காரணமாக பள்ளிக் கல்வி துறை, இடையில் 1 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் 11ம் தேதி, ஆகஸ்ட் 1ம் மற்றும் 22ம் தேதி, செப்டம்பர் 5ம் தேதி, அக்டோபர் 10ம் தேதி, நவம்பர் 14 மற்றும் 28ம் தேதி ஆகிய 7 சனிக்கிழமைகளில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி