உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொறையூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 பொறையூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி பொறையூர்பேட் சீனிவாச ராமானுஜன் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆரோக்கிய உணவுத் திருவிழா நடந்தது. கண்காட்சி துவக்க விழாவிற்கு தலைமையாசிரியை கிரிஜா வரவேற்றார். புதுச்சேரி கல்வித்துறை ஐந்தாம் வட்ட ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சி மற்றும் ஆரோக்கிய உணவு திருவிழா கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் காற்றாலை, சூரிய ஆற்றல், சொட்டுநீர்ப் பாசனம், மூலிகைத் தோட்டம் உள்பட பல்வேறு படைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிக்கு வைத்திருந்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !