மேலும் செய்திகள்
அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
05-Nov-2025
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தலைமை ஆசிரியை சரோஜினி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சின்னராசு, வனிதா, ஏஞ்சலின் ஜெயம், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழலையர் முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 245 படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரோஜா, சிவமதி, விந்தியா ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
05-Nov-2025