உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.டி.எஸ்., சர்வதேச பள்ளியில் அறிவியல் கண்காட்சி

என்.டி.எஸ்., சர்வதேச பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி என்.டி.எஸ்., சர்வதேச உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியினை மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பூலோகநாதன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தார். கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட அறிவியல், சமூக அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்று பார்வையிட்டனர். கண்காட்சியில் மழலை பள்ளி மாணவர்களின் மூலிகை தாவரங்கள், சத்தான உணவு முறைகள் இடம்பெற்றன. தண்ணீர் விநியோகிப்பவர், விக்ரம் விண்கலம், நெகிழி பயண்பாட்டு மேலாண்மை, தானியங்கி கழிவு நீர் சுத்தகரிப்பு, பருவநிலை, மண்ணில்லா வேளாண்மை உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !