மேலும் செய்திகள்
மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
6 minutes ago
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
7 minutes ago
7 பேரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி
8 minutes ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் அனிதா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுபத்திரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனாதேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்மணி ஆகியோர் செய்திருந்தனர். செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் தாஜிதீன் அலி அகமது தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமேஷ், குமாரராஜா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மஞ்சு வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் கண்காட்சியை துவக்கி வைத்தார். மாணவர்களின் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கனகதுர்கா, மோகனா, கிருஷ்ணன் சீதாதேவி, ஊழியர் சுமதி ஆகியோர் செய்திருந்தனர். வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தலைமை ஆசிரியர் வீரய்யன் துவக்கி வைத்தார். ஆசிரியர் ரேணு வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாலகுமார், சபரிநாதன், செந்தமிழ் செல்வி, புலோரன்சியா, நித்திலவல்லி, ஸ்ரீமதி, விஸ்வபிரியா, சுகந்தி, சங்கரி, பூவிழி, ஓம் சாந்தி, மலர்க்கொடி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார். கதிர்காமம், தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கணபதி முன்னிலை வகித்தார். துணை இயக்குநர் ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அமரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி, உறுப்பினர் நடராஜன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனிதா, ரஹமத் பீவி, பூங்கொடி, சுகந்தி, செல்வராசு உட்பட பலர் பங்கேற்றனர். 450க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. பொறுப்பாசிரியர் சுகன்யா நன்றி கூறினார்.
6 minutes ago
7 minutes ago
8 minutes ago