உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கடல் நீரை ஆராயும் மிதவை கருவி பராமரிப்பு பணிக்காக கரையேற்றம்

 கடல் நீரை ஆராயும் மிதவை கருவி பராமரிப்பு பணிக்காக கரையேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி கடலின் நீரின் துாய்மையை கண்டறிய மிதக்கவிடப்பட்ட 1 டன் கருவி கரையேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் சார்பில், புதுச்சேரியில் கடல் நீரின் தன்மையை அறிய கடந்த 2021ம் அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மிதக்க விடப்பட்டது. இதன் வாயிலாக புதுச்சேரி கடலில் கழிவு நீர் கலப்பது, ஆல்கா பெருக்கம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.1 டன் எடை கொண்ட இந்த மிதவை கருவியை மீனவர்கள் உதவியுடன், கரையேற்றி கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் சென்சார்களை பரிசோதனை செய்தனர். கடல் நீர் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கூறுகையில், 'கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உட்பட பல விஷயங்களை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த மிதவை நமக்குத் தரும். அப்படியே ஒரு மணி நேரத்திற்குஆறு தகவல்களை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கும். இந்த தகவல்கள் அனைத்துமே நிகழ் நேர அடிப்படையில் கண்காணித்து ஆய்வு செய்யப்படும். கடல் நீரில் சுற்றுச்சூழல் பாதிப்பு இருந்தால் நேரடியாக ஆய்வு செய்வோம். அதற்கான காரணத்தை கண்டறிந்து மாநில அரசுக்கும், சுற்றுச்சூழல் துறைக்கு அலர்ட் செய்வோம். கடல் நீர் ஆராய்ச்சிமிதவை கருவியை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மேலே கொண்டு வந்து பராமரிப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் 5 ஆண்டுகள் வரை நமக்கு தேவையான துல்லிய தவல்களை அளிக்கும். மிதவை நாளை 16ம் தேதி மீண்டும் கடலில் ஆய்வுக்காக இறக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை