புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை, சட்ட பாதுகாப்பு கருத்தரங்கு
புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை மற்றும் சட்டப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், சேதராப்பட்டில் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினர். துணைத் தலைவர் மோதிலால் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., அகில இந்திய தேசிய செயலாளர் வகிதா நிஜாம் சிறப்புரையாற்றினர்.தமிழ்நாடு செயலாளர் பாஸ்கர், புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி., கவுரவத் தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி, மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன், மாநில செயலாளர் தயாளன், மாநில துணைத் தலைவர் முருகன், மாநில செயலாளர் பாஸ்கர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் விசுவநாதன் கருத்துரை வழங்கினர்.கூட்டத்தில், பல்வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரியில் வேலை செய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக உணவு பங்கீடு அட்டை வழங்கிட வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, தொழிலாளர் துறை கணக்கெடுப்பு நடத்தி வேலை உத்தரவாதம், இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.