உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி துவக்கம்

கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி துவக்கம்

திருபுவனை : புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் வரைநிலை மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் காலனி டி.பி.ஜி., நகர் பகுதியில் ரூ.21.78 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருபுவனை எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பாட்கோ செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளநிலைப் பொறியாளர் முரளி முன்னிலை வகித்தனர்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர், ஒப்பந்ததாரர் ராமையன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை