மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
25-Jan-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் மார்ச் 1ம் தேதி சித்தர்கள் மாநாடு மற்றும் அசுவமேத யாகம் நடக்கிறது. மன அமைதிக்கான ஆன்மிக மையம், அகில பாரத இந்து மகாசபையின் புதுச்சேரி கிளை மற்றும் அகில உலக ஆன்மிகப் பேரவை சார்பில் வரும் மார்ச் 1ம் தேதி, புதுச்சேரியில் சித்தர்கள் மாநாடு மற்றும் உலக மக்கள் நலன் பெற வேண்டி அசுவமேத யாகம் நடக்கிறது. முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மந்தக்கரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு அகில உலக ஆன்மிகப் பேரவை நிறுவனர் தெய்வசிகாமணி சுவாமி தலைமை தாங்கு கிறார். அகில பாரத இந்து மகா சபா புதுச்சேரி தலைவர் மணிவண்ணன் முன்னிலையில் நடைபெறும் இம்மாநட்டில் ஆதினங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் துறவிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து உலகில் சமாதானம் மற்றும் அமைதி நிலவி, போர்களற்ற சகாப்தம் உருவாகவும், மனித குலம் தன்னிறைவு பெற்று வாழ வேண்டி அசுவமேத யாகம் நடக்கிறது.
25-Jan-2026