தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில், கலாம் தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் பயிற்சி மைதானத்தில் நடந்தது. இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி வேளாண் அறிவியல் நிறுவன சேர்மன் கணேஷ் போட்டியினை துவக்கி வைத்தார். இதில், பல்வேறு வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்க அட்ஜெஸ்டவுள், குவாட், இன்லைன் மற்றும் பேன்சி இன்லைன் பிரிவுகளில் போட்டிகள் நடந்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போ ட்டிக்கான ஏற்பாடுகளை கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் தலைவர் வெங்கடேசன், செயலர் காமேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.