மேலும் செய்திகள்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கம்
13-Sep-2025
புதுச்சேரி : லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மத்திய சுகாதாரத் துறைமூலம் 'ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் ' என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கான சுகாதார சிறப்பு முகாம் நேற்று நடந்தது. காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்து, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், துணை இயக்குநர்அனந்த லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
13-Sep-2025