உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் மூலநாதர் கோவிலில் மகர சங்கராந்தி சிறப்பு பூஜை

பாகூர் மூலநாதர் கோவிலில் மகர சங்கராந்தி சிறப்பு பூஜை

பாகூர் : பாகூர் ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில், மகர சங்கராந்தியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பாகூரில் வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில், மகர சங்கராந்தி தினமான நேற்று உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. இதையொட்டி, காலை 6.00 மணிக்கு பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.இதனை தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு, சூரியபகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், மாலை 6.00 மணிக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 8.00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் சுவாமி உள் புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். மாட்டு பொங்கலை முன்னிட்டு, இன்று (15ம் தேதி) கோவில் கொடி மரம் எதிரே செவி சாய்ந்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை