உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோலார் பேனல் அமைப்பது குறித்து இன்று சிறப்பு சேவா சேது முகாம்

சோலார் பேனல் அமைப்பது குறித்து இன்று சிறப்பு சேவா சேது முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மின் துறை, அசோக் நகர் மின்துறை அலுவலகம் சார்பில் பி.எம். சூர்யகார் முப்ட் பிஜ்லி யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளுகக்கு சோலார் பேனல் அமைப்பது தொடர்பான சிறப்பு ‘சேவா சேது’ முகாம் இன்று 14ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை, குமரன் நகர் சமுதாய கூடத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைப்பது குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய உதவி பெறுவது குறித்த தகவல்களும், திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறைகளை எளிதாக மேற்கொள்வது உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழிகாட்டல்களும் நேரடியாக வழங்கப்படும். சுத்தமான எரிசக்தி மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை