ஸ்பின்கோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
திருபுவனை : திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலையின் அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனவடியாக பணிக்கொடை வழங்க வேண்டும். ஸ்பின்கோ நில மோசடிக்க துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்பின்கோ ஆலை வளாகத்தில் செயல்படும் வட்டார போக்குரவத்து அலுவலகம் முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கத்தின் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். பல்வே தொழிற்சங்க நிர்வாகிகள் எல்லப்பன், மஞ்சினி, முருகன், சங்கரன்,, சிவப்ரகாசம், தமிழ்செல்வம், ரமேஷ், தேசிங்கு, விசுவாசு, நடராஜன், ரவிச்சந்திரன், கலமக்கண்ணன், ராஜாராம் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தின் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.