உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில், உடற்கல்வி ஆசிரியர் துரை வரவேற்றார். பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரமேஷ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், கல்வே காலேஜ் பிரெஞ்ச் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜவஹர் பத்மநாபன் வாழ்த்தி பேசினர். ஆசிரியை மேரி சூசன் தொகுப்புரையாற்றினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லதா மகேஸ்வரி, கணேசன், ஆனந்த், அசோக்குமார், சத்தியமூர்த்தி, பழனி, ரேணுகாதேவி, மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். தமிழ் ஆசிரியர் சுப்புராயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை