மேலும் செய்திகள்
த.வீ.செ.மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
09-May-2026
புதுச்சேரி: புனித சூசையப்பர் குளூனி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 269 மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவிகளும், 450க்கு மேல் 42 மாணவிகளும் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியளவில் மாணவி அஞ்சனா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவிகள் காருண்யா, திவ்யஸ்ரீ ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவிகள் சுஜித்ரா, லெரு ஆன்சி, பிரீத்திகா ஆகியோர் 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். பாட வாரியாக பிரெஞ்சு பாடத்தில் இரண்டு மாணவிகளும், ஆங்கில பாடத்தில் ஒரு மாணவியும், கணித பாடத்தில் 5 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 7 மாணவிகளும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். தமிழ்ப் பாடத்தில் ஒரு மாணவியும், சமூக அறிவியல் பாடத்தில் 3 மாணவிகளும் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவிகள் மற்றும் துணையாக இருந்த ஆசிரியர்களை குளூனி இல்லத் தலைவி செலின், பள்ளி முதல்வர் ரோசிலி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
09-May-2026