முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா துவக்கம்
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் கொடியேற்றுத்துடன் துவங்கியது.புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பால சுப்ரமணியர் கோவிலில், சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் சுவாமி கோவில், சாரம் சுப்ரமணியர் கோவில், முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி கோவில், பெத்துச்செட்டி பேட்டை, சித்தி விநாயகர் சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா துவக்க விழா நடந்தது.இந்த விழாவையொட்டி முருக பக்தர்கள், 6 நாள் விரதத்தை நேற்று துவக்கினர். வரும், 7ம் தேதி சூரசம்ஹாரத்துடன் விரதம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, 8ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.