மாநில கில்லி தண்டா போட்டி நண்பேண்டா அணி வெற்றி
புதுச்சேரி : மாநில அளவிலான கில்லி தண்டா போட்டியில் நண்பேண்டாஅணி முதல் பரிசு வென்றது.புதுச்சேரி மாநில கில்லி - தண்டா விளையாட்டு சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கில்லி தண்டா போட்டிகள் வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டில் நடந்தது.மாநில கில்லி தண்டா தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து நடந்த இப்போட்டியில் மாநில கில்லி தாண்டா அணியும், நண்பேண்டா அணியும் மோதின.நண்பேண்டா அணி முதல் பரிசு வென்றது. இரண்டாம் பரிசை கில்லி தண்டா வென்றது. மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் வளவன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கில்லி தண்டா சங்க நிர்வாகி ஆல்பர்ட் நன்றி கூறினார்.