உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் 

 புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் 

புதுச்சேரி: புனித வெள்ளியை முன்னிட்டு புதுச்சேரி தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசு கிறிஸ்து நிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு கடந்த பிப்ரவரி 18 ம் தேதி தவக்காலம் துவங்கியது. அதன் ஒருபகுதியாக, புனித வெள்ளியை முன்னிட்டு, நேற்று புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் பங்கு தந்தைகள் தலைமையில் சிலுவைப்பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, புதுச்சேரி, மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமையிலும், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்குதந்தை சூசைராஜ் தலைமையிலும் சிலுவைப்பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ