குறுவட்ட தடகள போட்டி மாணவர்கள் பங்கேற்பு
அரியாங்குப்பம்: கல்வித்துறை விளையாட்டு போட்டிகள் வட்டம் 3 சார்பில், சேலிய மேடு அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், தடகள போட்டிகள் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் போட்டியை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த போட்டிகளில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் தனிக்குமரன்உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.