உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டேக்வாண்டோ நடுவர் தேர்வு

 டேக்வாண்டோ நடுவர் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ நடுவர்களுக்கான தேர்வு மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள துரோணா டேக்வாண்டோ அகாடமியில் நடந்த தேர்வு மற்றும் பயிற்சி பட்டறைக்கு தேசிய நடுவர் தக் ஷிணபிரியா தலைமை தாங்கினார். இதில், சர்வதேச நடுவர் பகவத்சிங் பங்கேற்று, புதிய டேக்வாண்டோ நடுவர்களை தேர்வு செய்தனர். புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டுச் சங்கத்தின் நிறுவன தலைவர் ஸ்டாலின், தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டினர். தேர்வு செய்யப்பட்ட நடுவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். சங்க செயலாளர் மஞ்சுநாதன், காரைக்கால் அத்தலெடிக் டேக்வாண்டோ கிளப் தலைவர் பாபுராவ், செயலாளர் ஹரி, நிர்வாகிகள் செந்தில்குமார், அஸ்வின், பாலானந்த், செல்வரசி, நாகார்ஜூனன், ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிலம்பரசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை