உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரிக்கரையில் தார் சாலை எம்.எல்.ஏ.,க்கள் பூமி பூஜை

ஏரிக்கரையில் தார் சாலை எம்.எல்.ஏ.,க்கள் பூமி பூஜை

வில்லியனுார்: முருங்கப்பாக்கம் ஏரி மேற்கு கரையில் தார் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ.,க்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், 1.32 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கொம்பாக்கம் சாலை துவங்கி முருங்கப்பாக்கம் ஏரி மேற்கு கரையில் தார் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ., மற்றும் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் ஆகியோர் பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர்கள் ஷாம்பெபியன், பிரித்திவிராஜ், ஊர் முக்கியஸ்தர்கள் கந்தசாமி, ஜெகன்மோகன், சக்திவேல், ரவி, ஆரோக்கியதாஸ், ஜனார்தனன், தேசிகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி