மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்தி
12-Jan-2025
புதுச்சேரி : புதுச்சேரி வரி வல்லுநர்கள் சொசைட்டி துவக்க விழா செண்பகா ஹோட்டலில் நடந்தது.விழாவிற்கு, சொசைட்டி தலைவர் செந்தில்குமார், சேர்மன் கார்த்திகேயன் வரவேற்றனர். ஜி.எஸ்.டி., மத்திய இணை ஆணையர் தினேஷ், மாநில ஓய்வு பெற்ற ஆணையர் ராஜசேகர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், சொசைட்டியின் புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், இளஞ்செழியன், பிரபு, கணேசன், மூர்த்தி மற்றும் பூர்ண செல்வகுமார் ஆகியோர் ஜி.எஸ்.டி., வருமான வரி கட்டும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.விழாவில், துணைத்தலைவர் சாமி, பொருளாளர் முரளிதரன் மற்றும் ஆலோசனை கமிட்டி சேர்மன் மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
12-Jan-2025