மேலும் செய்திகள்
உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...
07-Jan-2025
புதுச்சேரி ; தற்காலிக கவர்னர் மாளிகை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கவர்னர் மாளிகையான ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. ராஜ் நிவாஸில் கவர்னர் தங்கும் அறைகள், அலுவலகம், கவர்னர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. 250 ஆண்டு பழமையான ராஜ் நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் தளத்துக்கு முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்ற கைலாஷ்நாதனை கவர்னர் மாளிகையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். இந்நிலையில், பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் 13 கோடியில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் குடும்ப பொழுதுப்போக்கு மையம் கட்டடப்பட்டுள்ளது.அந்த இடத்திற்கு கவர்னர் மாளிகையை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அங்கு அடிப்படை வசதியை ஏற்படுத்த ரூ.3.88 கோடியில் பூமி பூஜை கடந்த செப்டம்பர் 15ம் தேதி நடந்தது. கவர்னர் மாளிகை, அவரது அலுவலகம் இடம் மாறவுள்ளதால் அங்கு அறைகள், தேவையான வசதிகள், மின்வசதி, தரைதளம் அமைக்கப்பட்டு வருகிறது.ஆனால் பணி துவங்கி 4 மாதங்களாகியும் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார். பணிகள் நிறைவடையாததால் முதல்வர் ரங்கசாமி டென்ஷன் ஆனார்.ஏன் வேலை இன்னும் முடியவில்லை என அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரை கடிந்து கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
07-Jan-2025