உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோசடி கும்பலிடம் இழந்த பணம் மீட்பு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்களுக்கு நன்றி தெரிவிப்பு 

மோசடி கும்பலிடம் இழந்த பணம் மீட்பு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்களுக்கு நன்றி தெரிவிப்பு 

புதுச்சேரி: கனடா நாட்டில் வேலை வாங்கிதருவதாக கூறிய மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், கனடா நாட்டில் அதிக சம்பளத்திற்கு உடனடியாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதைநம்பிய ராஜேஷ்குமார், மோசடி கும்பலிடம் செயலாக்க கட்டணம், விசா, மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை செலுத்தி இழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், பெங்களூர் மற்றும் பிஹார் பகுதியை சேர்ந்த 4 நபர்களை கைது செய்த போலீசார், அவர்கள் இந்தியா முழுதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை கனடா நாட்டிற்கு அனுப்பவதாக கூறி 65 கோடிக்கு மேல், மோசடி செய்து தெரியவந்தது.இதற்கிடையே, மோசடி கும்பலிடம் இருந்து ராஜேஷ் குமார் இழந்த ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை மீட்டு கொடுத்தனர். இதையடுத்து, ராஜேஷ் குமார் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் ஸ்டேஷனுக்கு சென்று, மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் ஏட்டு மணிமொழி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை