மேலும் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
4 hour(s) ago
மீன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
4 hour(s) ago
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
4 hour(s) ago
7 பேரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி
4 hour(s) ago
இ ருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், போர்மேகங்கள் சூழ்ந்து முதலாம் உலகப் போர் வெடித்தது. அப்போது பிரான்சின் ராணுவத்திற்கு அதிக ஆள்பலம் தேவைப்பட்டதால், குடியேற்ற நாடுகளின் பக்கம் பார்வையைத் திருப்பியது. பழைய காலனிகளில் இருந்து ராணுவத்திற்கு நேரடியாக ஆள் சேர்ப்பதை வெர்சாயி ஒப்பந்தம் தடுத்தது. அத்துடன், 1905 ம் ஆண்டு ராணுவச் சட்டப்படி பிரஞ்சியர் மட்டுமே ராணுவத்தில் சேரமுடியும்; மற்றவர்க்கு அனுமதியில்லை. ஆனால், போர் வரும் சூழலில் ராணுவ வீரர்கள் அதிகமாகத் தேவைப்பட்டதால், சட்டைக்காரர்களும் ரெனோன்சான்களும் சேரும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. 1915-30, மேலும் புதிய காலனியான இந்தோ சீனா ஒப்பந்த வரையறைக்குள் வரவில்லை. எனவே, அங்கு ராணுவ நடவடிக்கைகளுக்குத் தடையில்லை. ஆகவே, புதுச்சேரி வாசிகளை பிரெஞ்சு அரசு குறி வைத்து முதலாம் உலக போருக்கு ஆட்களை திரட்டியது. குறிப்பாகத் தலித்துகளையும், ரெனோசான்களையும் சட்டைக்காரர்களையும் முஸ்லிம்களையும் அங்குக் குடியேறவைத்து, அங்கேயே பயிற்சியும் கொடுத்து இந்தோசீனப் படையணி ஒன்றை உருவாக்கி, பிரான்சுக்கு அழைத்துக் கொண்டனர். அதன்படி, பிரஞ்சிந்திய வீரர்களின் முதல் தொகுதி, முதலாம் உலகப் போரில் பங்கேற்பதற்காக, 1914 செப்டம்பர் 26 அன்று மர்சேய் துறைமுகத்தில் இறங்கியது. அக்டோபர் 22ல் களத்தில் இறக்கப்பட்டது. 1915ம் ஆண்டு டிசம்பர் 30ல் சட்டத்தை மேலும் தளர்த்தி, விருப்பமுள்ள எவரும் படையில் சேரலாம் என்று அறிவித்ததால், இந்தியர்களும் ராணுவப் பணியில் சேரும் வாய்ப்பைப் பெற்றனர். 1916ம் ஆண்டில், இந்தியர் படையணி என்று உருவாகுமளவிற்கு எண்ணிக்கை பெருகியிருந்தது. காலனி வீரர்கள், சாதி, இனம் என்று பிரித்துக் காட்டாமல், மற்ற பிரஞ்சியரோடு ஒரே படையணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். புதுச்சேரியில், சமூகத்தில் கிடைக்காத சமத்துவம் போர்ப்படையில் கிடைத்ததால், அவர்கள் புதிய உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் போரிட்டார்கள். போர் முடிந்த பின் பிரான்சில் தங்கி இருந்த போதும் மக்கள் அவர்களை மிகவும் தோழமையுடன் நடத்தினர். அவர்களில் பெரும்பாலானோர் புதுச்சேரிக்கு வராமல் இந்தோ சீனாவிற்கு திரும்பி போனார்கள். அந்த அளவிற்கு புதுச்சேரியை விட அங்கு வாழ்க்கை தரம் சிறப்பாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் துவங்கும் வரை தங்களது உறவினர்களையும் அழைத்துக் கொண்டனர். ஒரு பகுதியினர் தாய் மண்ணான புதுச்சேரிக்கு திரும்பி வந்து இங்கேயே தங்கி விட்டார்கள். முன்பு ஆளுநராக இருந்த ஆல் பிரட் மர்த்தினோ வாக்களித்தபடி அவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டது. சொல் தாக்கள் என அழைக்கப்பட்ட அவர்களுக்கு பிரெஞ்சு அரசு தாராளமாகவே ஓய்வூதியம் வழங்கியது . இந்திய நாணய மாற்று விகிதத்தில் அது மிக அதிகமானதால் அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். சொல் தாக்கள் என்றாலே தனி கவுரவமாகவும் இருந்தது. போர்வீரர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் கணிசமான ஊதியம் பெற்றார்கள். ஆகவே தான் புதுச்சேரி விடுதலை பெற்ற பொழுது ஏராளமான ரெனோன்சான்கள் பிரான்சில் நிரந்தரமாக குடியேறினர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago