உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் ஓட்டு மோசடி செய்த பா.ஜ., ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாடு முழுதும் ஓட்டு மோசடி செய்த பா.ஜ., மோடி ஆட்சியை துாக்கி எறிய வேண்டும் என, ஆதாரங்களுடன் மக்களிடம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஓட்டு மோசடி பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும், இந்திய தேர்தல் ஆணையம் 5 கோரிக்கைகளை நிறைவேற்றவும், 5 கோடி கையெழுத்துகள் பெற அனைத்து மாநிலங்களிலும் ஓட்டு திருட்டு விழிப்புணர்வு பிரசார கையெழுத்து பெறும் பணியை துவக்கி உள்ளார். புதுச்சேரி காங்., சார்பில், ஓட்டு திருட்டு தொடர்பாக கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. நேற்று காமராஜர் நகர் தொகுதி, 45-அடி சாலை பாலாஜி நகர் சந்திப்பு காங்., அலுவலகத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. காமராஜர் நகர் தொகுதி பொருப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக முன்னாள் அமைச்சர் கந்த சாமி, இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை