உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வானிலை ஆராய்ச்சி மையம் இன்றும், நாளையும் பார்வையிடலாம்

வானிலை ஆராய்ச்சி மையம் இன்றும், நாளையும் பார்வையிடலாம்

புதுச்சேரி: வானிலை ஆராய்ச்சி துறையின் 150வது ஆண்டை முன்னிட்டு, லாஸ்பேட்டை வானிலை ஆராய்ச்சி மையம், பொதுமக்கள் பார்வைக்கு இன்றும் நாளையும் திறந்து விடப்படுகிறது.இந்தியாவில் வானிலை ஆராய்ச்சி துறை கடந்த 1875ம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னையில் மண்டல ஆராய்ச்சி துறை கடந்த 1945 ம் ஆண்டு துவங்கினர். துறையின் 150 வது ஆண்டு மற்றும் சென்னை மண்டல ஆராய்ச்சி துறையின், 80 ஆண்டு நிறைவு விழா இன்று (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது.அதையொட்டி, வானிலை ஆராய்ச்சி துறையின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வானிலை ஆராய்ச்சி மையங்கள் பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்படுகிறது.புதுச்சேரியில் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, பாபு ஜெகஜீவன்ராம் சிலை அருகில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது. காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆராய்ச்சி சாதனங்கள், மழை அளவிடும் கருவிகள், வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் கருவிகளை உள்ளிட்ட சாதனங்களை, பொதுமக்கள் நேரடியாக காண முடியும். இந்த தகவலை இந்திய வானிலை ஆராய்ச்சி மைய, புதுச்சேரி கிளை வானிலையாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், தகவல்களுக்கு 9345575045 என்ற மொபைல் எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி