உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மோட்டார் கொட்டகையில் திருட்டு

 மோட்டார் கொட்டகையில் திருட்டு

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பகுதியில் மோட்டார் கொட்டகையில் மின் சாதன பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்க டாஜலபதி, 58; நேற்று முன்தினம் இரவு இவரது மோட்டார் கொட்டகையின் பூட்டை உடைத்து மின் ஒயர்கள், ஸ்டாட்டர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பத்ம நாபன், மணவாளன், பலராமன், ஆறுமுகம் ஆகியோரது மோட் டார் கொட்டகையின் கதவுகளை உடைத்து ஸ்டாட்டர் பாக்ஸ் மற்றும் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள் ளனர். இதுகுறித்து புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை