உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர உற்சவ சேவை

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர உற்சவ சேவை

புதுச்சேரி: காந்தி வீதியில் பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமங்கை ஆழ்வார் ஆண்டு திருநட்சத்திர உற்சவ வைபவம் கடந்த 4ம் தேதி துவங்கியது.அதனையொட்டி, தினமும் ஆழ்வார் சன்னதியில் இரவு 7:00 மணிக்கு சேவை சாற்றுமுறை நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை பெருமாள், ஆழ்வார் திருமஞ்சனமும், இரவு சுவாமி உள்புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, ஆழ்வார் சன்னதியில் திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம்) ஆண்டு திருநட்சத்திர உற்சவ சேவை சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி