உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருபுவனை, மண்ணாடிப்பட்டு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை

 திருபுவனை, மண்ணாடிப்பட்டு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, வில்லியனுார் துணை கலெக்டர் குமரன் தலைமையில் திருபுவனை, மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தொகுதிகளில் உள்ள பதற்றமான ஓட்டுச் சாவடிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதில் தேர்தல் நேரத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தேர்தல் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அங்கு ஏதேனும் பிரச்னை, அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக காவல்துறை மற்றும் தேரதல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு துணை கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !